திருமணத்தின் முக்கியத் தருணங்கள் தவறவிட்ட புகைப்படக் குழு: ரூ.35 ஆயிரம் வழங்க உத்தரவு!
திருமண நிகழ்ச்சியில் உரிய நேரத்துக்கு வராமல் தாமதமாக வந்த புகைப்படக் குழுவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், ரூ.35 ஆயிரம் வழங்க கர்நாடக நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் சின்மயி எம். என்பவர், தனது திருமண நிகழ்ச்சிகளுக்காகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார். ஒப்பந்தப்படி, குறிப்பிட்ட நேரத்தில் வர வேண்டிய புகைப்படக் கலைஞர் நேரில் வராமல், தனது உதவியாளர்களை அனுப்பியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
70 நிமிட தாமதத்தால் முக்கிய நிகழ்வுகள் தவறின
மணமகள் தரப்பினர் பிற்பகல் 2.30 மணிக்கே புகைப்படக் குழுவை வருமாறு கேட்டிருந்தனர். ஆனால், அந்தக் குழுவினர் பிற்பகல் 3.40 மணிக்குத்தான் வந்துள்ளனர். இதனால் மணமகளின் ஊர்வலம், மணமகனின் வருகை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளைப் படம் பிடிக்க முடியாமல் போனதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த ஹாசன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், ஒப்புக்கொண்ட சேவையை உரிய முறையில் வழங்கத் தவறியதைச் சேவைக் குறைபாடாகக் கருதியது. இதையடுத்து, புகைப்பட நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடும், வழக்குச் செலவுக்காக ரூ.10 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டது.
எனினும், புகைப்படங்களின் தரம் உள்ளிட்ட பிற குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் அவற்றை ஆணையம் ஏற்கவில்லை. திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்குச் சேவை வழங்கும்போது நேரம் தவறாமல் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுகி