அசைவம் மற்றும் போதையை தவிருங்க... கார்த்திகை தீப திருநாளில் இத செய்ய மறக்காதீங்க!
Nov 24, 2026, 15:00 IST
கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவ.24) அசைவ உணவுகள் சமைப்பதையும் உண்பதையும் தவிர்ப்பதோடு, மது மற்றும் புகை போன்ற பழக்கங்களையும் அறவே தவிர்க்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
மேலும், மாலை நேரத்தில் வீட்டின் எந்தப் பகுதியும் இருட்டாக இல்லாமல் வெளிச்சமாக வைத்திருக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் பகல் தூக்கத்தைத் தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்துவது சிறந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்நாளில் வீட்டில் சண்டையிடுவதையும் கடுஞ்சொற்கள் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பணம் கடன் கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ முற்றிலும் தவிர்ப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.