கார்த்திகை ஸ்பெஷல்.. வீடுகளில் எங்கெங்கு, எத்தனை விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள்?

 

 இன்று திருக்கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், ஏற்றி வழிபடுகிற ஒவ்வொரு தீபத்திலும் சக்தி ஒளியாகி வந்து இறங்கி நம் இல்லங்களில்  குடியேறி நம்மை  ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.கார்த்திகை மாதம் முழுவதும் சிலர் வீட்டு வாசலில் விளக்கேற்றுவர். பௌர்ணமி நாளில்  டுகளிலும் வாசலிலும் வரிசையாக விளக்கேற்றி வழிபாடு செய்வர். திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள 10 கிமீ வரை இதன் ஒளியை காணலாம்.

 சாதாரண நாட்களிலேயே   வீட்டின் தலை வாசல்படிகளில் சூரியோதயத்தின் போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும் விளக்கேற்றி வழிபாடு செய்வது மிகுந்த பலன்களை  கொடுக்கும். நம்மைச் சுற்றியும், நமது இல்லத்திலும் நல்ல அதிர்வுகளையும் தரும். தேவதைகளும், அஷ்டதிக் பாலகர்களும் நம்மைக் காப்பார்கள். அதிலும் இன்று கார்த்திகை தீபத்தின் போது, திருவண்ணாமலையில் மகாதீபமேற்றப்படும் அதே வேளையில் உங்கள் இல்லங்களிலும் தீபமேற்றி வழிபாடு செய்யலாம்.  எத்தனை தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோமோ, அதற்குரிய பலன்களும்,  புண்ணியங்களும் கிட்டும்.  வீடுகளில் எத்தனை தீபமேற்றி வழிபாடு செய்தால் நல்லது என்பது பலரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். 

வீட்டின் தலைவாசலில் 2 விளக்குகளும்,   பூஜை அறையில் 5 விளக்குகளும்   ஏற்ற வேண்டும். இந்த 5 விளக்குகளையும்  வட்டமாக எல்லா திசைகளிலும் வெளிச்சம் படும்படி ஏற்ற வேண்டும். வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் தீபம் ஏற்றுவது நல்லது.   குறிப்பாக சமயலறையிலும் விளக்கேற்றவேண்டியதும் அவசியம்.