"கருணாநிதி பெரியார் சுழிதான் போட்டிருப்பார்" - அமைச்சர் வன்னி அரசு கலகல பேச்சு!

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் தனித்தீர்மானம் குறித்த விவாதத்தின் போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரிடும் முறை குறித்து விசிக அமைச்சர் வன்னி அரசு நகைச்சுவையாகவும் சிலாகித்தும் பேசியது அவையில் கவனத்தை ஈர்த்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரும் தனித்தீர்மானம் மீதான விவாதத்தின் போது, திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசுகையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோிற்கைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் பிள்ளையார் சுழி போட்டார் என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய விசிக அமைச்சர் வன்னி அரசு, "மறைந்த கருணாநிதி பிள்ளையார் சுழி போட்டிருப்பார் என்று சொல்ல முடியாது; அவர் தந்தை பெரியாரின் கொள்கைப் பாதையைப் பின்பற்றியவர் என்பதால், எப்போதுமே பெரியார் சுழி போட்டே தனது பணிகளைத் தொடங்கியிருப்பார்" என்று நகைச்சுவையாகக் கூறினார்.

இருப்பினும், தற்போதைய சூழலில் முதலமைச்சர் கொண்டு வந்துள்ள இந்தத் தனித்தீர்மானம் தமிழ் சமூகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையிலான பாராட்டுக்குரிய முன்னெடுப்பு என்றும் அவர் தனது உரையில் பாராட்டினார்.