கரூர் துயரம்... 19 நாட்களுக்குப் பின் பனையூர் அலுவலகம் வந்த விஜய்.. நிர்வாகிகளுடன் சந்திப்பு!
கரூர் பிரசார கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் துயர சம்பவத்துக்கு 19 நாட்கள் கழித்து தவெக தலைவர் விஜய் நேற்று பனையூர் அலுவலகம் வந்தார்.
கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். அந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மதியழகன் மற்றும் அவருக்கு அடைக்கலம் அளித்ததாக கூறப்படும் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருவரும் சமீபத்தில் ஜாமீனில் வெளியேறினர். திருச்சி சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் தவெக ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின் இருவரும் சென்னை வந்து, நேற்று பனையூரில் விஜய்யை சந்தித்தனர்.
சிறையில் நேரில் பார்க்க முடியாததற்கு விஜய் வருத்தம் தெரிவித்ததாகவும், அவர்களது அனுபவங்களை கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது. கரூர் துயரத்திற்குப் பிறகு பனையூரில் விஜய் முதன்முறையாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!