undefined

ஐடி வேலையை விட்டு பலூடா வியாபாரம் தொடங்கிய கரூர் இளைஞர்! 

 
 

 

 

பெங்களூரில் Oracle India நிறுவனத்தில் ஆபரேஷன் பிரிவின் தலைவராக இருந்த பிரதீப் கண்ணன், கைநிறைய சம்பளம் பெற்றபோதிலும், 2019ஆம் ஆண்டு திடீரென தனது வேலையை ராஜினாமா செய்தார். பிறகு சொந்த ஊரான கரூருக்கு திரும்பி “பலூடா ஐஸ்கிரீம்” வியாபாரத்தை தொடங்கினார். அப்போது அவரை பார்த்து பலரும் “இத்தனை பெரிய வேலையை விட்டு ஐஸ்கிரீம் கடை திறக்கிறாரா?” என சிரித்தனர். ஆனால் இன்று அவர் இந்தியா மற்றும் துபாயில் 18 அவுட்லெட்களின் உரிமையாளராக வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.

பிரதீப் கண்ணன் தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் இந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். “சிறிய நகரில் கனவு கண்ட இளைஞன் → ஏசி அலுவலக பணி → Franchise Kitchens → Global shelves என என் வாழ்க்கை பயணம் மாறிவிட்டது” என அவர் எழுதியுள்ளார். அவரது இந்த பதிவு 24 மணி நேரத்தில் 8.3 லட்சம் பார்வைகள், 10,500 லைக்கள், 838 ரீபோஸ்ட்கள் பெற்று வைரலாகி வருகிறது. மேலும், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் விரைவாக அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!