காஷ்மீரில் தொடங்கியது முதல் பனிப்பொழிவு! குல்மார்க் மலைப் பகுதிகளில் வெள்ளை போர்வை”!

 

 

காஷ்மீர் பள்ளத்தாக்கின் உயரமான மலைப்பகுதிகளில் இந்த பருவத்துக்கான முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இதனால் அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவி வரும் நிலையில், சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களாக காஷ்மீரில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இடையிடையே மழையும் பெய்து வந்த நிலையில், தற்போது உயரமான மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.

 

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான குல்மார்க் உள்ளிட்ட பகுதிகளில் முதலாவது பனிப்பொழிவு நேற்று பதிவானது.இதுபோல பந்திப்போரா மாவட்டத்தின் துலைல் பள்ளத்தாக்கு மற்றும் குரேஸ் செக்டார் பகுதிகளிலும் மலைப்பகுதிகளில் லேசான பனியடுக்கு காணப்பட்டது.

 

காஷ்மீரின் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால், அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. பனிப்பொழிவால் காஷ்மீரின் இயற்கை அழகு மேலும் அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உயரமான பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வானிலை நிலவரத்தை கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கையுடன் பயணம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.