தவெக எம்.எல்.ஏ.க்கள் சர்ச்சை… பதில் சொல்லுங்க முதல்வரே...  கஸ்தூரி காட்டம்! 

 

 

 

தமிழக முதலமைச்சர் விஜய், ஆட்சி நிர்வாகம் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார்களில் கவனம் செலுத்தாமல் இருப்பதாக நடிகையும் பாஜக பிரமுகருமான கஸ்தூரி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எந்தப் பிரச்சினை வந்தாலும் முதலமைச்சர் கண்டுகொள்வதில்லை என்றும், திருமணம், கார் ரேஸ் என ஜோடியாகச் சுற்றுவதாகவும் மக்கள் பேசத் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜய், திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களும் விஜய்தான் என்றும், எல்லா தொகுதிகளிலும் தனக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியதை கஸ்தூரி சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார்களுக்கு யார் பொறுப்பு?

விஜய்யின் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அடுத்தடுத்து புகார்கள் எழுந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள கஸ்தூரி, அந்தப் புகார்களுக்கு விஜய்தானே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.சமீபத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், கஸ்தூரியின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.