கேதார்நாத்  கோவில் இன்றுடன் நடை அடைப்பு ... 19 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

 

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலில் இந்த ஆண்டுக்கான யாத்திரை நிறைவடைந்துள்ளது. குளிர்காலம் தொடங்குவதையொட்டி, இன்று (நவம்பர் 11) காலை 8.30 மணிக்கு கோவில் நடை முறைப்படி அடைக்கப்பட்டது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான கேதார்நாத் புனித யாத்திரை நிறைவுக்கு வந்துள்ளது.

இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில், கடும் பனிப்பொழிவு மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக ஆண்டுதோறும் குளிர்காலத்தில் மூடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த யாத்திரைக் காலத்தில் சுமார் 19 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கேதார்நாத் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடை அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாபா கேதார்நாத்தின் உற்சவர் பல்லக்கு உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோவிலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு குளிர்காலம் முழுவதும் வழிபாடுகள் நடைபெறும்