நிவாரண முகாம்களை தயாரா வைத்திருங்க... அமைச்சர் அறிவுறுத்தல்!
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் ‘மோன்தா’ புயல் அக்டோபர் 27-ஆம் தேதி தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும். 28-ஆம் தேதி இதே புயல் தீவிரப்புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. புயல் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா பகுதிகளை பாதிக்கக்கூடும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏரிகளின் நீர்மட்டம் கண்காணிக்கப்படுவதாகவும், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு கரைக்குத் திரும்ப அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அக்டோபர் 1 முதல் 24 வரை தமிழகத்தில் 21.08 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் நெருங்கிய மாவட்டங்களில் புயல் காரணமாக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், மாவட்ட அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை மையம் கனமழை பகுதிகளில் வெள்ள அபாயம் இருக்கலாம் என எச்சரித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!