undefined

 இணையதளத்தில்  வைரலாகும் கீர்த்தி சுரேஷ்    !

 

 நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று ரகுதாத்தா திரைப்படம் வெளியாகியுள்ளது.  சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய் மற்றும் ஆனந்தசாமி உட்பட பலர் நடித்துள்ளனர். இவர்களது நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் இன்று ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்தில் பெண்ணியம் பேசியுள்ளார்கள்.

இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கின்றனர்.  இந்தி மொழியை எதிர்க்கவில்லை என்பதை தெளிவாக காட்சிபடுத்தியுள்ளனர். படம் முழுக்க வரும் கீர்த்தி சுரேசும்,  எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. படம் கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும் படத்தின் க்ளைமேக்ஸ்க்காகவே பார்க்கலாம்" எனக் கூறியுள்ளார்.  படம் கொஞ்சம் ஸ்லோவாக போனாலும் ரசித்து பார்க்கலாம் என்கின்றனர்.  கீர்த்தி சுரேஷ் மகாநடிகை படத்தினைப் போல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை சிறப்பாக நடித்துள்ளார் எனக் கூறியுள்ளார். க்ளைமேக்ஸ்: படம் அந்த காலத்தில் நடப்பதைப் போல் எடுத்துள்ளனர். ஆனால் படம் நன்றாக இருக்கின்றது.

படத்தில் ஆங்காங்கே வரும் நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக இருக்கு. ஷேன் ரோல்டன் இசை அருமையாக உள்ளது. படத்தின் இடைவெளி காட்சிக்கு முன்னரும் க்ளைமேக்சும்  அருமையாக உள்ளது. குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.   படத்தினை இந்த தலைமுறைக்கு ஏற்றவகையில் போர் அடிக்காமல் சொல்லியுள்ளனர். படத்தில் கீர்த்தி சுரேஷ்தான் அதிகம் வருகின்றார்.  நல்ல கண்டெண்ட் இருக்கின்ற படமாக அமைந்துள்ளது. முதல் பாதி தமிழ்நாட்டு கலாச்சாரம் என இருந்தது. க்ளைமேக்ஸ் காட்சியில் இந்தி திணிப்பு குறித்து கூறியுள்ள கருத்து சிறப்பாக உள்ளது. படத்தினை அனைவருமே பார்க்கலாம்" எனக் கூறியுள்ளனர்.
 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா