கேரளாவில் பறவைக் காய்ச்சல்: புளியரை சோதனைச்சாவடியில் 24 மணி நேரத் தீவிர கண்காணிப்பு!

 

 கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறையினர் 24 மணி நேரத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவிலிருந்து கோழிகள், முட்டை மற்றும் தீவனங்கள் கொண்டு வரும் வாகனங்கள் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழகத்திற்குள் வரும் மற்ற அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது,பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளன.