ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து உயிரிழப்பு… பெரும் சோகம்!

 

 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சங்கனாச்சேரி பகுதியில் வசித்து வந்த சஜு ஆண்டனி (64), அவரது மனைவி அனு (59), மகன் சவின் (34) ஆகியோர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அக்டோபர் 31ஆம் தேதி காலை அவர்களைத் தொடர்புகொள்ள முடியாததால் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளனர். வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கதவைத் திறந்து பார்த்தபோது மூவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

 

சஜு ஆண்டனி முன்பு மளிகைக் கடை நடத்தி வந்ததாகவும், நஷ்டம் காரணமாக அதனை மூடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கடன் சுமை உள்ளிட்ட நிதிப் பிரச்சினைகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. சம்பவத்தின் பின்னணி மற்றும் உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.