கேரளாவில் சொகுசு கார் மோதி வியாபாரி பலி: நீதிபதியின் 17 வயது மகன் மீது வழக்கு!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் சேரநல்லூர் பகுதியில் சொகுசு கார் மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற வியாபாரி ஜெயபாலகிருஷ்ணன் (55) உயிரிழந்தார். இந்த விபத்தில், கூடுதல் மாவட்ட நீதிபதியின் 17 வயது மகன் கார் ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
அதிகாலை நேரத்தில் கண்டெய்னர் சாலையில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த ஜெயபாலகிருஷ்ணன் மீது கார் மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக சிறுவன் மீது முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் கடுமையான குற்றப்பிரிவும் சேர்க்கப்பட்டது. அவர் சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காரின் உரிமையாளரான நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்ய கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.