முல்லைப் பெரியாறுக்கு பதில் புதிய அணையை தமிழக எல்லையில் கட்டிக்கொள்ளலாம் - கேரளா முதல்வர்!

 

தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்துப் பேசிய கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், தமிழக எல்லையிலேயே புதிய அணையை அமைத்துக் கொள்ளலாம் என அதிரடி யோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாகப் புதிய அணை ஒன்றைத் தமிழக எல்லையிலேயே அமைத்துக் கொள்ளக் கேரளா சம்மதம் தெரிவித்துள்ளது. புதிய அணைக் கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்வது, அதன் வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளைத் தமிழக அரசே நேரடியாக மேற்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார். புதிய அணைக்கான மொத்த கட்டுமானச் செலவுகளையும் கேரள அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

அணைப் பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களின் சுமுகமான உறவைப் பாதுகாக்கும் வகையிலும் இந்த முன்மொழிவை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.