அடுத்தடுத்து 7 வாகனங்கள் மீது கார் மோதல்: 10 பேர் காயம்; டிரைவர் கைது!
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில், அதிவேகமாக வந்த கார் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 27 வயது கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை 183-ல் உள்ள சோட்டி பகுதியில், கடந்த நவம்பர் 1-ம் தேதி காலை 8.15 மணியளவில் இந்த விபத்து நடந்தது. ஷரோனின் பிலிப் என்பவர் ஓட்டி வந்த கார், முதலில் முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி, பின்னர் ஒரு ஆட்டோ ரிக்ஷா மற்றும் மற்றொரு கார் மீது மோதியது. தொடர்ந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் உள்ளிட்ட வாகனங்களிலும் மோதியது.
இந்த விபத்தில் 5 கார்கள், ஒரு ஆட்டோ ரிக்ஷா, ஒரு ஸ்கூட்டர் என மொத்தம் 7 வாகனங்கள் சேதமடைந்தன. ஆட்டோவில் பயணம் செய்த தம்பதி மற்றும் அவர்களது இரு குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணையின்போது, தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் வாகனங்கள் மீது மோதியதாக ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். விப