கண்களை கட்டிக் கொண்டு கீ போர்டு வாசித்து மாணவர் உலக சாதனை!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஜான் டிசோன், சென்னையில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தியுள்ளார். காலை முதல் இரவு வரை தொடர்ந்து கீபோர்டு வாசித்து இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இவரது இந்தத் திறமை அங்கீகரிக்கப்பட்டு நோபிள் உலக சாதனை புத்தக அமைப்பினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் கண்களைக் கட்டிக் கொண்டும் கீபோர்டு வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இளம் வயதிலேயே கடினமான முயற்சியைக் மேற்கொண்டு பல மணி நேரம் தொடர்ந்து இசைக்கருவியை வாசிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இந்த அரிய சாதனைக்காக அவருக்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சாதனையின் மூலம் பள்ளிக்கும், பெற்றோருக்கும் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மாணவனின் இந்தச் சாதனையைப் பாராட்டிப் பள்ளியின் தலைவர், தாளாளர், முதல்வர் மற்றும் டிரஸ்ட் செயலாளர் ஆகியோர் நேரில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இத்தகைய சாதனைகள் இளம் தலைமுறையினருக்குப் பெரிய ஊக்கமாக அமையும்.