undefined

  எமர்ஜென்சி படத்துக்கு  எதிர்ப்பு... திரையரங்குகளில்  காலிஸ்தான் ஆதரவாளர்கள் ரகளை!

 


 
இங்கிலாந்து பாராளுமன்றத்தில்  எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி பாக் பிளாக்மேன் உரையாற்றினார். அதில் ‘‘வடமேற்கு லண்டனில் வால்வர்ஹாம்ப்டன், பர்மிங்காம், ஸ்லாக், ஸ்டெய்னஸ் மற்றும் மான்செஸ்டர் ஞாயிறு நாளில்  பொதுமக்கள் நடிகை கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி படத்தை பார்ப்பதற்காக திரையரங்குகளுக்கு சென்றிருந்தனர்.

திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் போது  மூகமுடி அணிந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரையரங்கிற்குள் நுழைந்து ரகளை செய்து பார்வையாளர்களை அச்சுறுத்தினர்.  மேலும் திரைப்படத்தை நிறுத்தும்படி மிரட்டல் விடுத்தனர்.  இந்த படம் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது. அதன் தரம் அல்லது உள்ளடக்கம் குறித்து நான் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் எனது தொகுதி மக்கள் மற்றும் பிற தொகுதி மக்கள் அந்த படத்தை பார்த்து முடிவெடிக்கும் உரிமையை நான் பாதுகாக்கிறேன்.

தணிக்கைக்கு பிறகு  திரைக்கு வரும் இதுபோன்ற படங்களை பார்க்க விரும்பும் மக்கள் அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் பார்க்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கு இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்க எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!