கிடாவிருந்து... தனுஷ் பட பூஜையில் கேமராவால் வந்த சர்ச்சை... படக்குழுவினருக்கும் ஊழியருக்கும் வாக்குவாதம்!

 

சிவகங்கை மாவட்டம் மாரநாட்டில் உள்ள கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற நடிகர் தனுஷின் 56வது பட பூஜை விழாவின்போது, உரிய அனுமதியின்றி கேமராவைக் கொண்டு சென்றதால் ஏற்பட்ட முரண்பாட்டால் படக்குழுவினருக்கும் அறநிலையத்துறை ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சிவகங்கை மாரநாட்டிலுள்ள கருப்பணசாமி கோயிலில் நடிகர் தனுஷின் 56வது திரைப்படத்திற்கான பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது. அப்போது, படக்குழுவினர் உரிய அனுமதி பெறாமல் கோயிலுக்குள் கேமராவைக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அறநிலையத்துறை ஊழியர் கடுமையாக எதிர்த்ததால், படக்குழுவினருக்கும் அந்த ஊழியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. இதனையடுத்து காவல்துறை உடனடியாகத் தலையிட்டுப் படக்குழுவினரை அங்கிருந்து வெளியேற்றியது.

இந்தச் சலசலப்புகளுக்குப் பிறகு, நடிகர் தனுஷ் கோயிலில் 18 அடி நீள அரிவாளைத் தனது நேர்த்திக்கடனாகச் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, 20 கிடாய்கள் வெட்டப்பட்டு அங்குத் திரண்டிருந்த ரசிகர்களுக்குப் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.