பனிச்சறுக்கு விளையாடிய மகள்... அருகில் அமர்ந்து ரசித்த கிம் ஜாங் உன்... வைரல் வீடியோ!  

 

 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது மகள் கிம் ஜு ஏ பனிச்சறுக்கு விளையாடுவதை அருகில் அமர்ந்து ரசிக்கும் புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

வடகொரியாவின் வடக்கு பகுதியில் சீன எல்லைக்கு அருகே அமைந்துள்ள சம்ஜியோன் நகரில், நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் கிம் ஜாங் உன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு புதிதாக உருவாக்கப்பட்டு வரும் சுற்றுலா மையம், பனிச்சறுக்கு தளம், ஓட்டல்கள் உள்ளிட்ட வசதிகளை அவர் பார்வையிட்டார்.

இந்தப் பயணத்தின்போது அவரது மனைவி ரி சோல் ஜு மற்றும் மகள் கிம் ஜு ஏ ஆகியோரும் உடன் சென்றனர். அப்போது வெள்ளை நிற உடையணிந்த கிம் ஜு ஏ, பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார். இதனை கிம் ஜாங் உன் அருகில் அமர்ந்து ரசித்தார். இந்தப் புகைப்படங்களை வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

கிம் ஜு ஏ, தனது தந்தைக்குப் பிறகு வடகொரியாவின் தலைமைப் பொறுப்புக்கு வரக்கூடும் என தென்கொரிய உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. எனினும், இதுகுறித்து வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.