கொளத்தூர் இடைத்தேர்தலில் வி.எஸ்.பாபு மகனுக்கு வாய்ப்பு? முதல்வர் விஜய் ஆலோசனை  !

 

 

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவையடுத்து, அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அவரது மகன் வி.எஸ்.பி. சதீஷ்குமாரை வேட்பாளராகக் களமிறக்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் வரை கொளத்தூர் தொகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை நிர்வாக ரீதியாக சதீஷ்குமார் கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு அரசுத் தரப்பில் ஒத்துழைப்பு அளிக்க அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வி.எஸ்.பாபு மறைவால் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியாகியுள்ளது. இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, சதீஷ்குமாருக்கு தொகுதிப் பணிகளை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இடைத்தேர்தலில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவது குறித்து தவெக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.