கொளத்தூர் இடைத்தேர்தல்... மேயர் பிரியா பெயரைப் பரிந்துரைக்கும் சேகர்பாபு!
சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவால் காலியாக உள்ள கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில், இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க தி.மு.க. தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தரப்பில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்த வி.எஸ். பாபு மறைந்ததைத் தொடர்ந்து, அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இளைஞர்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்க தி.மு.க. தலைமை ஆலோசித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தரப்பில் சென்னை மேயர் பிரியா பெயர் வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேயர் பிரியாவைத் தவிர்த்து, தி.மு.க. நிர்வாகிகளான புரசைவாக்கம் ரங்கநாதன், சிற்றரசு, எழிலன் நாகநாதன் மற்றும் கார்த்திக் மோகன் ஆகியோரது பெயர்களும் கொளத்தூர் வேட்பாளர் பட்டியலில் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு பெயர்கள் முன்வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டாலும், கொளத்தூர் இடைத்தேர்தலில் யார் வேட்பாளராகக் களமிறங்குவார் என்பது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதியானது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.