கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானார்... தமிழக அரசியலில் அதிர்ச்சி!
Nov 19, 2026, 15:37 IST
சென்னை கொளத்தூர் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானார். அவரது மறைவு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலினை தோற்கடித்து அவர் கவனம் பெற்றார்.
75 வயதான வி.எஸ்.பாபு, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுமார் 70 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நவம்பர் 19-ம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.