கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை புதிய அறிக்கை வெளியீடு!

 

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்துச் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏவான வி.எஸ்.பாபு, மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக கடந்த 9-ஆம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, தொடர்ந்து தீவிர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அளிக்கப்படும் சிகிச்சைகளை அவரது உடல் ஏற்றுக்கொண்டு வருவதாகவும் மருத்துவர்கள் புதிய அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.