விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 254 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - கொங்கன் ரயில்வே!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டுப் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் தடையின்றிப் பயணம் செய்ய வசதியாக, 254 சிறப்பு ரயில்களை இயக்கக் கொங்கன் ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
தெற்கு கோவா கொங்கன் ரயில்வே துணைப் பொது மேலாளர் பாபன் கட்கே அளித்த தகவலின்படி, மத்திய ரயில்வேயுடன் இணைந்து 246 சிறப்பு ரயில்கள் வரும் செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 27 வரை இயக்கப்படவுள்ளன.
மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் இருந்து சாவந்த்வாடி, ரத்னகிரி, மட்காவ் மற்றும் மங்களூரு. லோக்மான்ய திலக் முனையத்தில் இருந்து ரத்னகிரி, மட்காவ் மற்றும் மங்களூரு. புனேவில் இருந்து ரத்னகிரி மற்றும் சாவந்த்வாடி. மேற்கு ரயில்வேயுடன் இணைந்து மேற்கு ரயில்வேயுடன் இணைந்து 8 கூடுதல் சிறப்பு ரயில்கள் பாந்த்ரா, வதோதரா, விஸ்வாமித்ரி, வல்சாத் மற்றும் புசாவல் ஆகிய நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. வெவ்வேறு தேதிகளில் இந்த ரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் தேசிய ரயில் விசாரணை அமைப்பு அல்லது கொங்கன் ரயில்வே செயலி மூலம் ரயில் நேரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
பண்டிகைக் காலத்தில் வழக்கமான ரயில்களை மட்டும் நம்பியிருக்காமல், பயணிகள் இந்தச் சிறப்பு ரயில்களில் பயணச்சீட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்து தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.