பிரபல கொரிய நடிகை நவாமுரா யூரி காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி!
Sep 16, 2026, 10:44 IST
'ரொமாண்டிக்ஸ் அனானிமஸ்' தொடர் மூலம் உலக அளவில் பிரபலமான கொரிய நடிகை நவாமுரா யூரி புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார். நடிகை நவாமுரா யூரிக்கு வயது 44. இவர் புற்றுநோய் பாதிப்பு காரணமாகக் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இவர் இந்நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்திருந்தபோதிலும், நடப்பாண்டின் தொடக்கத்தில் புற்றுநோய் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட தொடர் மருத்துவச் சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது மறைவைத் தொடர்ந்து, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இறுதிச்சடங்குகள் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டன. இவரது அகால மரணத்திற்குத் திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.