வளைவில் திரும்பியபோது பயங்கர விபத்து! கண்டெய்னர் லாரி மீது மோதி நொறுங்கிய ஆம்னி கார்!
கேரள மாநிலம் கொட்டாரக்கரை அருகே வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார், எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.
கொட்டாரக்கரை நோக்கி சென்று கொண்டிருந்த மாருதி ஆம்னி கார், தாமரச்சேரி சாலை வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது ஆம்னி கார் நேருக்கு நேர் மோதியது. மோதலின் வேகத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் நசுங்கியது. இதில் ஓட்டுநர் காருக்குள் சிக்கிக்கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், காருக்குள் சிக்கியிருந்த ஓட்டுநரை போராடி மீட்டனர்.பலத்த காயமடைந்த அவர் கொட்டாரக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.