கோவை மருதமலை முருகன் கோவில்: பக்தர்களின் வசதிக்காகப் படிக்கட்டுகள் மாற்றியமைக்கும் பணி தீவிரம்!
கோவை மருதமலை முருகன் கோவிலில் உள்ள படிக்கட்டு பாதை செங்குத்தாக இருப்பதால், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் பெரும் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, பழனி கோயிலில் உள்ளதைப் போன்று, பக்தர்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் படிக்கட்டுகளை மாற்றி அமைக்க இந்து சமய அறநிலையத்துறை பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொண்டுள்ளது.
கோயில் பின்புறம் பக்தர்களுக்கான மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திருப்பணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆன்மீக பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த புதிய மாற்றங்களால் எதிர்காலத்தில் கோயிலுக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி எளிதில் சுவாமி தரிசனம் செய்ய முடியும். இப்பணிகள் நிறைவடைந்தவுடன் பக்தர்களின் வசதிகள் மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.