தண்ணீர் வாங்க இறங்கியபோது நகர்ந்த ரெயில்: ஏற முயன்ற பெங்களூரு பயணி சக்கரத்தில் சிக்கி பலி

 

 

சென்னையில் உறவினர் திருமணத்தில் பங்கேற்க குடும்பத்துடன் ரெயிலில் வந்த பெங்களூருவைச் சேர்ந்த 50 வயது நபர், குப்பம் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

பெங்களூருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் சவுகான், தனது மனைவி மற்றும் மகளுடன் சென்னைக்கு ரெயிலில் புறப்பட்டார். பயணத்தின்போது தாகம் ஏற்பட்டதால், தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக குப்பம் ரெயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.

அவர் தண்ணீர் வாங்கிவிட்டு திரும்புவதற்குள் ரெயில் நகரத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி தண்டவாளத்தில் விழுந்த சுரேஷ்குமார், ரெயில் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்தார்.இதுகுறித்து குப்பம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.