லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் 9  பேர் பரிதாப பலி!

 

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே போர் பதற்றம் நீடித்து வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் நாட்டின் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய இலக்குகளை குறிவைத்து வான்வழியாக குண்டுகளை வீசி அழித்து வருகிறது.

இந்த மோதலின் தொடர்ச்சியாக லெபனானின் நபியத் மற்றும் சக்சக்யா ஆகிய பகுதிகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி வான்வழி தாக்குதலை நடத்தின. இந்த எதிர்பாராத தாக்குதலில் லெபனான் நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


 

இஸ்ரேல் ராணுவம் நடத்திய இந்த திடீர் தாக்குதல் அரபு நாடுகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டை நிறுத்த உடன்பாடுகள் எட்டப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையிலும் இந்த புதிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் எல்லையோர பகுதிகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதுடன் உலக நாடுகள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.