பெண்களே உஷார்... வளர்ப்பு பூனை செஞ்ச வேலையால் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு முகம் முழுக்க கொப்பளங்கள்!

 

ஆசையாக வளர்க்க வீட்டிற்கு அழைத்து வந்த செல்லப் பூனையால் அலர்ஜி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பூனையை அதன் பழைய உரிமையாளரிடமே நடிகை ஸ்ருதி ஹாசன் திருப்பி ஒப்படைத்துள்ளார்.

வீட்டிற்குப் பூனையைக் கொண்டு வந்த இரண்டு நாட்களிலேயே ஸ்ருதி ஹாசனின் முகம் முழுவதும் கடுமையான தடிப்புகளும் கொப்புளங்களும் ஏற்பட்டுள்ளன. ஆரம்பத்தில் மாம்பழங்கள் அதிகளவில் சாப்பிட்டதால் வந்த சூடு என அவர் நினைத்துள்ளார். ஆனால் தோல் மருத்துவரிடம் ஆலோசித்த போது, பூனையின் உரோமம் மற்றும் உமிழ்நீரால் இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது உறுதியானது.

ஒவ்வாமையைக் குறைக்கப் பல்வேறு சிகிச்சைகளும் மருந்துகளும் எடுத்துக்கொண்ட போதிலும், அவரது முகத்திலிருந்த கொப்புளங்கள் குறையவில்லை. அலர்ஜி தீவிரமடைந்ததாலும், ஆரோக்கியப் பிரச்சினைகள் தொடர்ந்ததாலும் வேறு வழியின்றி அந்தச் செல்லப் பூனையை அதன் பழைய உரிமையாளரிடமே மீண்டும் ஒப்படைக்க ஸ்ருதி ஹாசன் முடிவு செய்து திருப்பி அனுப்பியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் 'ஏழாம் அறிவு', 'புலி', 'வேதாளம்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து 'டிரெயின்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.