மேல்மருவத்தூரில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... களைகட்டிய ஆதிபராசக்தி ஆடிப்பூரத் திருவிழா!

 

நேற்று ஆடிப்பூரத் திருவிழாவினை முன்னிட்டு அதிகாலை முதலே மேல்மருவத்தூரில் பக்தர்கள் சாரை சாரையாகக் குவியத் தொடங்கி விட்டனர். ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் 54வது ஆடிப்பூரத் திருவிழா நேற்று நடைபெற்றதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். 

ஆடிப்பூரம் திருவிழாவில் கலந்துக் கொள்வதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் மேல்மருவத்தூரில் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர்.  

ஆடிப்பூரத் திருவிழாவில் உள்ளூர் மக்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் விரதமிருந்து, பால் குடம் சுமந்து வந்திருந்து அம்மனை தரிசித்தனர்.