குப்பை மேடு நிலச்சரிவில் 30 பேர் உயிரிழப்பு... கினியாவில் பெரும் சோகம்!

 

 

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கொனகெரியில் உள்ள டார் எஸ் சலாம் பகுதியில் கனமழை காரணமாகக் குப்பை மேட்டில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், குப்பை மலையின் அடியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாகப் புதைந்தன. அந்த நேரத்தில் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 6 பேரை மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து நாட்டின் தொடர்புடைய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பை மேட்டுப் பகுதியில் மக்கள் வசிக்கும் நிலை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது