வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு - நவ.21ம் தேதி வரை அவகாசம்!

 

2026-27-ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இந்த ஆண்டிற்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய அக்டோபர் 31-ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம் நவம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் காலக்கெடுவை வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியவர்கள் பயன்படுத்தித் தங்களது கணக்குகளைச் சமர்ப்பிக்கலாம். புதிய காலக்கெடுவுக்குள் உரிய நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் வருமான வரி கணக்கை முறையாகத் தாக்கல் செய்வது அவசியமாகும்.