தமிழகத்தில் சீர்குலையும் சட்டம் ஒழுங்கு... ஒரே நாளில் 14 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து முதல்வர் உத்தரவு!

 

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் மீது கடுமையான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக முதல்வர் உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் தீவிர ஆலோசனைகளை நடத்தியதைத் தொடர்ந்து, ஒரே நாளில் 14 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அதிரடி உத்தரவு தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்தவும், நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த டிஎஸ்பிக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்:

தேவக்கோட்டை டிஎஸ்பி கண்ணன் சென்னை பெருநகர காவல் குற்ற ஆவண காப்பக பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி R. பாலசுந்தரம் தஞ்சாவூர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் டவுன் டிஎஸ்பி N. கார்த்திக் மாநில தலைமையக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார். தக்கலை டிஎஸ்பி G. பதிபன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

அம்பாசமுத்திரம் எஸ்டி-யில் பணியாற்றிய K. கணேஷ்குமார் ராமநாதபுரம் உளவுத்துறைக்கும், அவருக்குப் பதிலாக அரியலூரிலிருந்து P. சண்முகம் அம்பாசமுத்திரம் புதிய டிஎஸ்பியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் எஸ்டி-யில் இருந்த M. மகேஷ்குமார் உளவுத்துறை கோர் செல்லுக்கும், சிவகங்கையில் இருந்த R. புருஷோத்தமன் ஆவடி கமிஷனரேட்க்கும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் A. அமலா ஆட்வின் மதுரை உளவுத்துறைக்கும், உசிலம்பட்டியில் இருந்த G.S. ஜெய்கணேசன் சிவகங்கை சப்-டிவிஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். அவருக்குப் பதிலாக விழுப்புரம் பயிற்சி பிரிவில் இருந்து B. சதீஷ்குமார் உசிலம்பட்டி டிஎஸ்பியாகப் பொறுப்பேற்க உள்ளார்.

கள்ளக்குறிச்சி DCRB-யில் இருந்த K. சரவணகுமரன் சிவகங்கை SJ&HR பிரிவுக்கும், திண்டுக்கல்லில் பணியாற்றிய A. செந்தில் எழந்திராயன் மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு (CCB-II)-க்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையைச் சீரமைக்கும் நோக்கில் முதல்வர் விஜய் எடுத்துவரும் இந்த தொடர் நடவடிக்கைகள் மாநிலத்தில் குற்றங்களைத் தடுப்பதற்கும், சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கும் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.