இனி RTIல் சட்டம் ஒழுங்கு தகவல்கள் கிடைக்காது - தமிழக அரசு புதிய உத்தரவு!

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான சில முக்கியத் தகவல்களை இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க முடியாது எனத் தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பொதுத்துறையின் கீழ் இயங்கி வரும் சட்டம் ஒழுங்குப் பிரிவிற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இப்பிரிவின் கீழ் சாதி மற்றும் மத மோதல்கள் தொடர்பான விவரங்கள், சட்டம் ஒழுங்கு மற்றும் போராட்ட வழக்குகள் குறித்த தகவல்கள், மேலும் பல்வேறு விசாரணை ஆணையங்கள் தொடர்பான ஆவணங்கள் பொதுமக்களுக்கு ஆர்டிஐ மூலம் வழங்கப்பட்டு வந்தன.

தற்போது சட்டம் ஒழுங்குப் பிரிவிற்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இனிமேல் மேற்கண்ட இது போன்ற முக்கிய விவரங்களை ஆர்டிஐ சட்டம் மூலம் பெற இயலாது.