4 குட்டிகளை ஈன்றது சிவிங்கிப் புலி; மத்தியப் பிரதேச குனோ தேசிய பூங்காவில் உற்சாகம்!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், இந்தியாவில் பிறந்த பெண் சிவிங்கிப் புலி ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில், இந்தியாவில் பிறந்த KGP12 என்ற பெண் சிவிங்கிப் புலி நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது.
தாயும் அதன் நான்கு குட்டிகளும் தற்போது மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.
இந்தியாவில் சிவிங்கிப் புலி இனத்தை வெற்றிகரமாக மீண்டும் நிலைநிறுத்தும் பாதுகாப்பு மற்றும் மறுஅறிமுக முயற்சியில் இந்த புதிய குட்டிகளின் பிறப்பு ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகவும் திருப்புமுனையாகவும் பார்க்கப்படுகிறது.