"அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்" - மிலாது நபிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

 

இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த நன்னாளான மிலாது நபியை முன்னிட்டு, இஸ்லாமியச் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தமிழக முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

"மனிதகுலத்தின் மீது அன்பு, ஏழை எளியோர் மீது இரக்கம், அனைவரிடமும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைப் பேண வேண்டும் என நபிகள் நாயகம் போதித்த உயரிய நெறிகளை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்று முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நபிகள் நாயகத்தின் நற்சிந்தனைகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்ய இந்நாளில் உறுதியேற்போம் எனத் தனது மிலாது நபி வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.