பிள்ளைகளின் கனவுகளை நனவாக்கும் தந்தையர்களின் தியாகத்தைப் போற்றுவோம்!" - டிடிவி வாழ்த்து!

 

உலகத் தந்தையர் தினத்தை முன்னிட்டு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் அனைத்துத் தந்தையர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் போற்றித் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்தின் அசைக்க முடியாத வாழ்வாதாரத் தூணாக விளங்குபவர்கள் தந்தையர்கள் மட்டுமே. தங்களது பிள்ளைகளுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்விலும் தேவையான துணிச்சலையும், சமூகப் பொறுப்புணர்வையும் கற்றுத்தரும் மிக முக்கிய முதல் ஆசானாகத் தந்தையர்கள் திகழ்கிறார்கள்.

சொந்தப் பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளையும், லட்சியங்களையும் நனவாக்குவதற்காகத் தங்களின் சொந்த சுகங்களை எவ்வித விளம்பரமும் இன்றி, சத்தமில்லாமல் தியாகம் செய்யும் உன்னதமான வடிவம் தான் தந்தை.

குடும்ப பாரத்தைச் சுமந்து கொண்டு, தங்களின் வியர்வையையும் உழைப்பையும் பிள்ளைகளின் உயர்விற்காக மட்டுமே முதலீடு செய்யும் அனைத்துத் தந்தையர்களின் உழைப்பையும், அளப்பரிய அர்ப்பணிப்பையும் இந்தத் தந்தையர் திருநாளில் நெஞ்சார வணங்கி மகிழ்வதாகத் டிடிவி தினகரன் தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.