சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக லியோனல் மெஸ்ஸி அதிர்ச்சி அறிவிப்பு!

 

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், உலகக் கோப்பையை வென்று தந்த நாயகனுமான லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அர்ஜென்டினா அணிக்காக நீண்ட காலம் விளையாடி பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ள 39 வயதான மெஸ்ஸி, தனது சர்வதேச கால்பந்து பயணத்திற்கு முழுக்குப்போடுவதாகத் தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா அணிக்காக மொத்தம் 207 போட்டிகளில் களம் கண்ட அவர், தன் தாயகத்திற்காக 125 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். அவரது தலைமையில் அர்ஜென்டினா அணி 2022-ஆம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பையை வென்றதுடன், 2014 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. மேலும், 6 உலகக்கோப்பைத் தொடர்களில் பங்கேற்றுள்ள அவர், 2 முறை சிறந்த வீரருக்கான விருதையும் வென்றுள்ளார்.

பலமுறை ஆழமாகச் சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தேசிய அணியில் விளையாட பல திறமையான இளம் வீரர்கள் காத்திருப்பதால் இதுவே சரியான தருணம் என்றும் அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.