undefined

அக்டோபர் 27 ம் தேதி சூரசம்ஹாரம்... திருச்செந்தூரில் உள்ளூர் விடுமுறை! 

 

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 22ம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 27ம் தேதியும், திருக்கல்யாணம் அக்டோபர் 28ம் தேதியும் நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், கோவில் சார்பில் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், அக்டோபர் 27ம் தேதி திங்கட்கிழமை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் காரணமாக, 27.10.2025 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடுமுறை செலவாணி முறிச் சட்டம் (Negotiable Instruments Act, 1881) அடிப்படையில் பொது விடுமுறை நாளாக கருதப்படாது என்றும், இதற்கான மாற்று அலுவலக நாளாக நவம்பர் 8, 2025 (இரண்டாவது சனிக்கிழமை) நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் அறிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?