ஜி.டி.ஏ. கேம் விளையாட ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை! 7,000 பேருக்கு லாஜிடெக் நிறுவனம் சலுகை

 

 

பிரபல வீடியோ கேம் ஜி.டி.ஏ. 6 வெளியீட்டை முன்னிட்டு, தனது உலகளாவிய ஊழியர்கள் 7,000 பேருக்கும் வீடியோ கேம் விளையாடுவதற்காக ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய கூடுதல் விடுமுறையை லாஜிடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

கணினி சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான லாஜிடெக், இந்தச் சலுகைக்கு 'லாஜி கேம் டே' எனப் பெயரிட்டுள்ளது. இதன்படி, முழுநேர ஊழியர்கள் முதல் பயிற்சியாளர்கள் வரை அனைவரும் இந்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஊழியர்கள் ஜி.டி.ஏ. 6 மட்டுமின்றி, தங்களுக்குப் பிடித்த எந்த வீடியோ கேமையும் விளையாடலாம். இந்த விடுமுறையை 2027ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் தங்களுக்கு வசதியான நாளில் எடுத்துக்கொள்ளலாம்.

கேமிங் என்பது நேரத்தை வீணடிக்கும் செயல் என்ற எண்ணத்தை மாற்றவும், விளையாட்டில் கிடைக்கும் அனுபவங்கள் வேலைத்திறனுக்கும் உதவும் என்பதை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்