லாரி-கார் மோதி கோர விபத்து! பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

 

 

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த குடும்பத்தினர் திருப்பதி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் இருந்த 5 பேர் பலத்த காயமடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் பணியாளர்கள் மற்றும் போலீஸார், காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பதி தரிசனத்தை முடித்துவிட்டு கிருஷ்ணகிரி திரும்பிக் கொண்டிருந்த குடும்பத்தினருக்கு நேர்ந்த இந்த சாலை விபத்து, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.