BIG BREAKING... லைவ் டிவி ஒளிபரப்பின் போதே ஹெலிகாப்டர் விழுந்து 3 பேர் பலி... அதிர்ச்சி வீடியோ!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சாலை விபத்து குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை சாட்ஸ்வொர்த் பகுதியில் நடந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் SUV மற்றும் நகர பேருந்து மோதிய விபத்து குறித்து செய்தி சேகரிக்க செய்தி ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்தது.
அந்த நேரத்தில் NBC4 லாஸ் ஏஞ்சல்ஸ் தொலைக்காட்சி நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து நேரலை ஒளிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, தொகுப்பாளர் நேரலையிலேயே அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் குறைந்தது ஒருவர் ஹெலிகாப்டரில் இல்லாமல், தரையில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஹெலிகாப்டரில் சரியாக எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.ஹெலிகாப்டர் விழுந்ததில் அருகிலிருந்த வாகனங்கள் மற்றும் சேமிப்பு கொள்கலன்களிலும் தீ பரவியது. 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. NTSB மற்றும் FAA அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.விபத்துக்கு முன்பு அந்த ஹெலிகாப்டர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், நேரலை காட்சிகளும் திடீரென துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.