காதலர்களே உஷார்... காதலி கொடுத்த முத்தத்தால் உயிரை இழந்த காதலன்... மெக்சிகோவில் துயரம்!
மெக்சிகோவில் காதலி தன் காதலனின் கழுத்தில் கொடுத்த ஹிக்கி (லவ் பைட்) காரணமாக ஏற்பட்ட ரத்தக்கட்டி மூளைக்குச் சென்று பக்கவாதத்தை ஏற்படுத்தியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த இளம் ஜோடிகளுக்கு இடையே ஏற்பட்ட காதலின் வெளிப்பாடாக, காதலி தனது காதலனின் கழுத்துப் பகுதியில் ஹிக்கி (லவ் பைட்) கொடுத்துள்ளார். கழுத்தில் ஏற்பட்ட இந்த அதிகப்படியான உறிஞ்சுதலால், அங்குள்ள இரத்த நாளத்தில் எதிர்பாராதவிதமாக ரத்தம் கட்டி உள்ளது.
கழுத்தில் உருவான அந்த இரத்தக் கட்டி இரத்த ஓட்டம் வழியாக நகர்ந்து நேராக மூளைக்குச் சென்றுள்ளது. இதனால் அவருக்குத் திடீரெனக் கடுமையான பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அவருக்குத் திடீர் வலிப்பு ஏற்பட்டுச் சுயநினைவை இழந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமான ஒரு செயல் விபரீதமாக மாறி உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.