தமிழகத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை.. 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கோடை வெயில் ஒருபுறம் வாட்டி வதைத்தாலும், வளிமண்டல மாற்றங்களால் சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி. விதர்பா முதல் குமரிக்கடல் வரை தெலங்கானா, கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக நிலவும் வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை போன்ற மாற்றங்களால் அடுத்த 7 நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், நீலகிரி போன்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்றும் 37°C முதல் 38°C வரை வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக வேலூர் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் தென் மாவட்டங்களில் 10% முதல் 35% வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.