வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... தமிழகத்தில் செப்.27 வரை மழை பெய்ய வாய்ப்பு!

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என்றும் இதன் காரணமாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.