undefined

 அடுத்த புயல் ரெடி... நவம்பர் 2ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! 

 
 

மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 2ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது மத்தியகிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்.31) காலை 8.30 மணி நிலவரப்படி அதே இடத்தில் நீடித்து வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து குஜராத் கடலோரப் பகுதிகளை நோக்கிச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தெற்கு மியான்மர் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரியும் குறைந்தபட்சம் 26 டிகிரியும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!