இன்று சந்திர கிரகணம்.. எந்தெந்த ராசிகளுக்கு எச்சரிக்கை தேவை? இந்த 3 ராசிகளுக்கு பாதிப்பு!
ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி காலை 6.53 மணிக்குத் தொடங்கி மதியம் 12.31 மணிக்கு நிறைவடையும் இந்த கிரகணம் பகல் வேளையில் நிகழ்வதால் இந்தியாவில் தெரியாது. இருப்பினும் ஜோதிட ரீதியாக இதன் தாக்கம் சில ராசிக்காரர்களுக்குக் கூடுதலாக இருக்கும் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடக ராசி: பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிப்பதால் மன அழுத்தம் மற்றும் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி விவகாரங்களில் அவசர முடிவுகளைத் தவிர்ப்பதுடன், புதிய சொத்துக்கள் வாங்குவதையோ அல்லது பெரிய தொகைகளில் முதலீடு செய்வதையோ தற்காலிகமாகத் தவிர்ப்பது நலம் தரும்.
கன்னி ராசி: குடும்பம் மற்றும் பணிபுரியும் இடங்களில் பேசும்போது கூடுதல் நிதானம் தேவை. தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். புதிய தொழில் தொடங்கத் திட்டமிடுபவர்கள் சூழ்நிலையை முழுமையாக ஆராய்ந்து கவனமாகச் செயல்பட வேண்டும்.
கும்ப ராசி: கிரகணம் சொந்த ராசியிலேயே நிகழ்வதால் இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு அலட்சியம்கூடப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் வியாபாரத்திலும் புதிய திட்டங்களிலும் கவனம் தேவை. குடும்ப உறவுகளிலும் பணியிடத்திலும் வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது அவசியமாகும்.