81 வயதில் புக்கர் பரிசை வென்று வரலாறு படைத்த எழுத்தாளர்! எம். ஜான் ஹாரிசனுக்கு சர்வதேச அங்கீகாரம்
2026-ம் ஆண்டுக்கான உலகப் புகழ்பெற்ற புக்கர் பரிசை, பிரிட்டிஷ் எழுத்தாளர் எம். ஜான் ஹாரிசன் தனது The End of Everything நாவலுக்காக வென்றுள்ளார். இதன் மூலம் புக்கர் பரிசு வரலாற்றிலேயே மிக அதிக வயதில் இந்த விருதைப் பெறும் எழுத்தாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு தற்போது 81 வயதாகிறது.
லண்டனில் நவம்பர் 9-ம் தேதி நடைபெற்ற விழாவில் இந்த விருது அறிவிக்கப்பட்டது. இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற ஆறு நாவல்களில் இருந்து ஹாரிசனின் படைப்பு ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டது. இந்த நாவல், சமூகக் கட்டமைப்பு சிதைந்த எதிர்கால உலகில் உயிர்வாழப் போராடும் மனிதர்களைப் பற்றிய டிஸ்டோபியன் புனைவாக அமைந்துள்ளது.
பரிசுத்தொகை ரூ.50,000 பவுண்டுகள்
புக்கர் பரிசுடன் ஹாரிசனுக்கு 50,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.60 லட்சம் அளவாகும்; மாற்று விகிதத்தைப் பொறுத்து தொகை மாறுபடும்.
இதற்கு முன்பு 2019-ல் 79 வயதில் புக்கர் பரிசை வென்ற மார்கரெட் அட்வுட், அதிக வயதில் விருது பெற்றவர் என்ற சாதனையை வைத்திருந்தார். தற்போது அந்தச் சாதனையை ஹாரிசன் முறியடித்துள்ளார்